Our Feeds


Friday, July 16, 2021

www.shortnews.lk

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! - சர்வதேச மன்னிப்புச் சபை

 



(நா.தனுஜா)


இலங்கையின் சட்டத்தரணியும் சிறுபான்மையின சிவில் உரிமைகள் செயற்பாட்டாளருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீதான குற்றச்சாட்டுக்கள் நீக்கப்படுவதுடன் எவ்வித நிபந்தனைகளுமின்றி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்ச ட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதுடன் அதன் பயன்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

மேலும் அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இலங்கையின் சட்டமா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைக்குமாறு பொதுமக்களிடம் சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »