இந்திய டெல்டா திரிபு தொற்றுறுதியானவர்களைக் கண்டறிவதற்காக, முழுநாட்டையும் உள்ளீர்க்கும் வகையில், மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடை ஆராமய பகுதியில், முன்னதாக அடையாளம் காணப்பட்ட 5 டெல்டா தொற்றாளர்கள் தவிர, அந்த பிரதேசத்தில் வேறு எவருக்கும் தொற்றுறுதியானதாக இதுவரையில் தகவல் கிடைக்கவில்லை என்றும் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.