Our Feeds


Tuesday, July 13, 2021

www.shortnews.lk

நாட்டை முன்னேற்றுவதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, 4 பேர் அடங்கிய குடும்பமொன்றை 6 லட்சம் கடனாளியாக்கியுள்ளது. - ஹர்ஷ

 



நாட்டை சுபீட்சமாக்குவதாக கூறிக்கொண்டு வந்த அரசாங்கம், நால்வர் அடங்கிய குடும்​பமொன்றை கடந்த 15 மாதங்களுக்குள் 6 இலட்சம் ரூபாய் கடனாளியாக்கியுள்ளது எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா, இந்த கடன் சுமை இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது என்றார்.


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ​“ராஜபக்‌ஷ அரசாங்கம், தனது ஆட்சியில் 15 மாதத்துக்குள் நபரொருவரை ஒரு இலட்சம் 50,000 ரூபாய் கடனாளியாக்கியுள்ளது” என்றார்.

பொருளாதார தெளிவற்ற ராஜபக்‌ஷ குடும்பம் சுற்றாடல், பொருளாதாரம், விவசாயம், கல்வி உள்ளிட்ட அனைத்தையும் அழிப்பதாகவும் அவர், தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்‌ஷ, பஷில் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, ஷசீந்திர ராஜபக்‌ஷ உள்ளிட்ட ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாட்டை ஆட்சி செய்தாலும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான சக்தி அவர்களுக்கு இல்லை என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »