கம்பளை குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலஸ்பாகை கெலிகுறுப் தேயிலை தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் பஸ் ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவமானது பய்ரா கோழி பண்ணைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த பஸ்ஸில் சென்ற நான்கு பேர் காயம் ஏற்பட்டு மூன்று பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலையிலும் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை குறுந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.