Our Feeds


Monday, July 19, 2021

www.shortnews.lk

கொழும்பு மாவட்டத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களில் 20 முதல் 30 வீதமானோர் டெல்டா வகை தொற்றாளர்கள் ?

 



கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவான கொவிட் தொற்றாளர்களில் சுமார் 20 முதல் 30 சதவீதமானோர் டெல்டா வகை தொற்றாளர்களாக இருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


தொற்றாளர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரிகளை பரிசோதித்ததன் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரதி சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடக்கிலும் டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இலங்கையில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, காலி, மாத்தறை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் ஏனைய பகுதிகளில் இந்த வைரஸ் இல்லை என கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »