Our Feeds


Sunday, July 25, 2021

www.shortnews.lk

தேவையேற்படின் 16 நாட்களுக்கு பின்னர் உள்ளூர்மன்ற தேர்தலை நடத்தலாம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

 



மாகாணசபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், உள்ளூர்மன்றத் தேர்தல்களுக்கான காலம் தற்போது நெருங்குகிறது.


2018 ஆம் ஆண்டு இறுதியாக உள்ளூர்மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக அந்தத் தேர்தல்களை நடத்த வேண்டும்.

2017 -16 ஆம் இலக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூர்மன்றங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, உள்ளூர்மன்றத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டிய திகதிக்கு, ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்து, அவசியமான அந்தத் தேர்தலை நடத்தும் அதிகாரமுள்ளது.

இதற்கமைய, மேலும் 16 நாட்களின் பின்னர் அவசியமாயின், உள்ளூர்மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள சூழ்நிலையில், கொவிட்-19 பரவல் காரணமாக, உள்ளூர்மன்றத் தேர்தல்களையும் பிற்போட நடவடிக்கை எடுக்கப்படுமாயின், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கு ஒரு ஆண்டு காலம் வரையிலேயே அதற்கான அதிகாரமுள்ளது.

இதற்கமைய, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி, தேர்தலை நடத்தாமல், 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 திகதிவரை அதனை பிற்போடுவதற்கு, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கு அதிகாரம் இருக்கின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »