வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும், இணுவிலில் வசிக்கும் நக்கீரன் மகிழினியன் என்பவராவார்.
மேற்படி மாணவன் கடந்த பயணத்தடையின் போது வீட்டிலிருந்த காலப்பகுதியை குறித்த முயற்சிக்குப் பயன்படுத்தியதாகவும் தனக்கு இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த செயலியை எவ்வாறு பதிவேற்றம் செய்வது மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அவர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.