பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது மஹியங்கனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நேற்று (27) கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, முன்னதாக பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய குற்றச்சாட்டில் அட்டலுகம பகுதியில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.