அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சில அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சுகாதார பிரிவுக்கு அறிவிக்காமல் மறைத்து வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இனிமேல், அவ்வாறு தொற்றாளர்களை மறைத்து வைத்திருக்கும் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் அவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண நாடு முழுவதுமுள்ள சுகாதார பரிசோதகர் இது தொடர்பில் அவதானமான இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும் எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகள் ஊடாக அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதை கவனத்திற் கொள்ளுமாறும் அடையாளம் காணப்படாத பல தொற்றாளர்கள் வெளியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.