முன்னாள் பெருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்பதையே முழு நாடும் குறிப்பாக சிறுபான்மையினர் விஷேடமாக முஸ்லீம்கள் விரும்புகின்றனர் என்பதுடன் எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சியும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர். மழ்ஹர்தீன் றஷீதி தெரிவித்தார்.
இது பற்றி அவர் ஊடகத்துக்கு தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் போது அலுத்கம, பேருவலை போன்ற பகுதியில் ஒரு சிலரால் பிரச்சனைகள் ஏற்பட்டன. ஆனால் மைத்திரி ரணில் கூட்டாட்சியில் மஹிந்தவின் ஆட்சியை விட பல மடங்கு பிரச்சனைகளும் அழிவுகளும் ஏற்பட்டன.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில சிங்கள மக்களிடம் இனவாதமும் மதவாதமும் உண்டு. ஆனாலும் நூற்றுக்கு தொண்னூற்றி ஒன்பது வீதமான சிங்கள மக்களிடம் மதவாதமும் இல்லை இனவாதமும் இல்லை. நாட்டையும் நாட்டிலுள்ள மக்களையும் நேசிக்கும் நல்ல மக்களே உள்ளனர்.
அந்த வகையில் கடந்த ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகத்துக்கு பல அபிவிருத்தி திட்டங்களை வழங்கியவர் பெசில் ராஜபக்ஷ என்ற வரலாற்றை மறக்க முடியாது.
ஆகவே அவர் மீண்டும் பாராளுமன்றம் வந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எமது ஐக்கிய காங்கிரஸ் (உலமா) கட்சியின் தெளிவான நிலைப்பாடாகும்.