Our Feeds


Tuesday, June 29, 2021

www.shortnews.lk

BREAKING: அரசுக்குள் மீண்டும் குழப்பம் - பசில் MP ஆவது குறித்து அரசாங்கம் இதுவரை தீர்மானிக்க வில்லை - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதில்

 





பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற பிரவேசம் அல்லது அமைச்சர் பதவிப்பிரமாணம் குறித்து அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவித தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது கட்சிக்கு உட்பட்ட விடயம் என்று கூறுகின்றீர்கள். ஆனால் தகவல்களுக்கு அமைவாக பசில் ராஜபக்ஷவிக்கு நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது நாடு சப்பந்தப்பட்ட முக்கிய விடயம் என்பதினால் இவ்வாறு நடைபெறவுள்ளதா அல்லது உங்களுக்கு தெரிவிக்கப்படவில்லையா? என்பது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

பத்திரிக்கைகளில் குறிப்பிடப்படும் விடயங்களைக் கொண்டு கேள்வி எழுப்புவது பொருத்தமான விடயமல்ல. அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரமாகும். அவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தால் அது குறித்து ஜனாதிபதி எமக்கு அறிவிப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »