அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ள ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் மரண தண்டனையிலிருந்து ஜனாதிபதி மன்னிப்பின் மூலம் விடுதலை பெற்றுள்ள துமிந்த சில்வாவும் தேசிய பட்டியல் மூலம் விரைவில் பாராளுமன்றம் நுழையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைள் தற்போது இடம் பெற்று வருவதாக தெரியவருகின்றது.
தற்போது பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வரும் ஜயந்த கெட்டகொட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு விட்டுக் கொடுக்க தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் தவிர மர்ஜான் பளீல் உள்ளிட்ட 4 MP க்களும் பசிலுக்காக பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக தெரியவருகிறது. (VK)