Our Feeds


Thursday, June 24, 2021

www.shortnews.lk

நாட்டுக்குள் டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். - அமைச்சர் Dr சுதர்ஷனி எச்சரிக்கை

 



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


உலகளாவில் பரவியுள்ள வைரஸ்கள் இந்திய வைரஸான டெல்டா வைரஸுக்கு மாற்றமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே, நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் -19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே சபையில் தெரிவித்தார்.

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவல் இலங்கைக்கு மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றல்ல, இது உலகளாவிய வைரஸ் பரவலாகும். ஆகவே ஏனைய நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை நாமும் எதிர்கொண்டு வருகிறோம். சகல துறைகளிலும் நாம் பொருளாதார ரீதியில் நெருக்கப்பட்டுள்ளோம். ஏற்றுமதி மற்றும் தேசிய உற்பத்திகள் மூலமாக சகல வருவாயும் தடைப்பட்டுள்ளது. மத்திய அபிவிருத்தி நாடு என்பதாலேயே இந்த நெருக்கடியை நாம் பெரியளவில் எதிர்கொண்டுள்ளோம்.

அதேபோல் நாடாக இன்று மூன்றாம் கொவிட் -19 அலைக்கு முகங்கொடுத்து வருகிறோம். முதலாம் அலையில் எமக்குப் பெரிய தாக்கம் ஏற்படவில்லை, ஆனால், வைரஸ் தன்மை மாறுபட்டு அல்பா என்ற வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்து வருகிறோம். மரணங்களும், தொற்றாளர் எண்ணிக்கையும் 50 சத வீதத்தால் அதிகரித்துள்ளது. சுகாதார துறையும் நெருக்கடியை சந்தித்துள்ளது. எனினும் அரசாங்கமாக நாம் நெருக்கடிகளை சமாளிக்க சுகாதார துறையை விரிபுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »