மேல் மாகாணத்திலிருந்து சென்ற 425 பேருக்கு காலி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 மற்றும் 7ஆம் திகதிகளில் குறித்த அலுவலகத்தில் 632 பேருக்கு இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்ட நிலையில், இவர்களுள் 425 பேர் மேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை, காலி தொகுதி குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்குமாறு, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மற்றும் உணவட்டுன மருந்தக களஞ்சியசாலை கட்டுபாட்டாளருக்கும் 14ஆம் திகதி காலி பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, காலி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் மற்றும் பிரதேச தொற்று நோயியல் விசேட நிபுணர் ஆகியோர் கடந்த 9ஆம் திகதி இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.