(செ.தேன்மொழி)
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மிரிஸ்வத்த பகுதியில் இன்று (29) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது , போக்குவரத்து கட்டுப்பாட்டு சட்டவிதிகளுக்கு புறம்பாக ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று அடையாளம் காணப்பட்டதுடன் அதன் சாரதி , உதவியாளர் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக நேற்றுக் காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 455 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுள் 87 பேர் கண்டியிலும் 53 பேர் குளியாபிட்டியிலும் , 51 பேர் எல்பிட்டி பகுதியிலும் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமையப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 45,099 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் செயற்பட்டு வரும் பொது போக்கவரத்து நடவடிக்கைகள் நிறுவனங்கள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிறுபத்திற்கமைய செயற்பட வேண்டும். அதற்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.