பானதுறை வடக்கு பள்ளமுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
12 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் இவ்வாறு குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் குறித்த வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.