கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பேராதனை முருததலாவ பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.
ஒரே குடும்பததை சேர்ந்த 72 வயதுடைய தந்தை, 70 வயதுடைய தாய் மற்றும் 38 வயதுடைய அவர்களுடைய மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்றுக்கு உள்ளான பின்னர் குறித்த மூவருக்கும் பல சந்தர்ப்பங்களில் மூச்சுத் திணரல் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த மூவரும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த குடும்பத்தை சேர்ந்த மேலும் மூன்று பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் பெணிதெனிய சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.