Our Feeds


Monday, June 28, 2021

www.shortnews.lk

பசில் ராஜபக்ஷ நல்லது செய்ய பாராளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை - பெங்கமுவே நாலக தேரர் எதிர்ப்பு.

 



இரட்டை குடியுரிமையுடன்  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பதவிகளை வகிப்பது நாட்டிற்கு அல்லாமல் அந்த நபருக்கே பயனளிக்கும் என, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.


தனது விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச விரைவில் முக்கிய அமைச்சு பதவியொன்றை பொறுப்பேற்கவுள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவ்வாறு பதவி வகிப்பவர்கள் பிரச்சினை ஏற்பட்டவுடன் அந்த நாட்டுக்கு சென்றுவிட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இரட்டை குடியுரிமையுடன் நாட்டை ஆட்சி செய்ய அனுமதிப்பது மிகப்பெரிய தவறு என்றும் அவர் கூறினார்.

நல்லது செய்ய வேண்டும் என்றால், பசில் ராஜபக்ஷ அதற்காக நாடாளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரட்டை குடியுரிமைகொண்டவர்கள் நாட்டு நிர்வாகத்திலும், அரசியலிலும் பங்குப்பற்றுவதும் தவறானது என்று கூறியுள்ள அவர், இரட்டை குடியுரிமையை உடையவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிரான செயற்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »