Our Feeds


Tuesday, June 22, 2021

www.shortnews.lk

சிலருக்கு தலை வீங்கிவிட்டது - அனுரகுமார திஸாநாயக கடும் சாடல்.

 



சுற்றாடலுக்கும் வளத்துக்கு ஏற்பட்ட அழிவின் அறிகுறிகளாகவே, நாட்டின் கரையோரங்களில் இருந்து உயிரிழந்த நிலையில் கடல்வாழ் உயிரினங்கள் மீட்கப்படுகின்றன எனத் தெரிவித்த, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, தமக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்ற தலைவீக்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் அனைத்துக்கும் பதிலளிக்க தொடங்கியுள்ளனர் என்றனர்.


ஆமைகள், மீன்கள் ஏன் உயிரிழக்கின்றன என்பது தொடர்பில் அது தொடர்பான நிபுணத்துவம் உடையவர்களே அறிவிக்க வேண்டும். ஆனால், நாலக கொடஹேவாவும் டக்ளஸூம், சமல் ராஜபக்‌ஷவும் தமக்கே அனைத்தும் தெரிந்ததைப் போன்று பதிலளிக்கின்றனர் என்றார்.

கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயனம் மற்றும் அதிக உஷ்ணம் காரணமாகத்தான் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் இது அவர்களின் அபிப்ராயம் எனத் தெரிவித்த அவர், ஆனால், இந்த அரசாங்கம் ஏனைய எல்லா பிரச்சினைகளிலும் தோல்வியடைந்துள்ளமைப் போல் இந்தப் பிரச்சினையிலும் தோல்வியையே வெளிகாட்டியுள்ளது என்றார்.
 
நாட்டை திறப்பது தொடர்பில், சுகாதாரத் தரப்பினரை அடிப்படையாக வைத்து, தீர்மானங்களை எடுத்திருக்க  வேண்டுமென தெரிவித்த அவர்,  நாட்டை மூடுவதற்கும் திறப்பதற்கும் எடுக்கப்பட்ட  முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதா? என்ற பிரச்சினை  தமக்கு இருப்பதாகவும்  மூடியிருந்ததால் நன்மை கிடைத்ததாக தெரியவில்லை என்றும்  பெயருக்காக மட்டுமே நாடு மூடப்பட்டிருந்தது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »