வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் தினம் குறித்து, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
ஜுலை மாதம் முதலாம் திகதி இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, அடுத்த நாடாளுமன்ற அமர்வு வாரத்தில், எத்தனை நாட்களுக்கு அமர்வை நடத்துவது என்பது குறித்தும் தீர்மானிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை, கடந்த 22 ஆம் திகதி, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த அவநம்பிக்கை பிரேரணையில் 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.