மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைகுழுவால் நியமிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்த சுயாதீன நிபுணர் ஆலோசனை குழுவில் இருந்து பேராசிரியர் நீலிகா மலவிகே இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலவிகே இராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கொழும்பு வடக்கு (ராகம) மருத்துவ பீடத்தின் இணைப் பேராசிரியர் ஏ.பத்மேஷ் இந்தக் குழுவிலிருந்து இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.