Our Feeds


Monday, June 28, 2021

www.shortnews.lk

பசிலை பாராளுமன்றம் வருமாறு அழைத்தது ஏன்? சாகர காரியவசம் பதில்!

 



பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்கு வருமாறு இம்முறை முன்வைக்கும் கோரிக்கையை அவரால் நிராகரிக்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் இன்று (28) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என வினவியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அவர்,

இல்லை அது எமது கட்சியின் நிலைப்பாடு. குறித்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் எதிர்கொண்ட இன்னல்கள் எமக்கு புரிந்தது. அதன்படி எமது மக்களுக்காக அதனை செய்ய வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்தோம்.

பசில் ராஜபக்ஷதான் இந்த கட்சியின் நிறுவனர்.

கட்சி உருவான நான்கரை ஆண்டுகளில், அந்தக் கட்சியில் இருந்து ஜனாதிபதி ஒருவரையும் அரசாங்கம் ஒன்றையும் உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்த ஒரு சிறந்த நபராகவும் அவர் இருந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், நமது முந்தைய அரசாங்கத்திற்கு சுமார் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைய உதவியது பசில் ராஜபக்ஷ தான்.

அத்தகைய நபரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர சிறப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் அவரைப் போன்ற ஒருவர் வந்து குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தால், அது நாட்டுக்கு முக்கியமானதாக இருக்கும் என்பது எமது எதிர்ப்பார்ப்பு.

எமது கட்சி மற்றும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

இந்தச் சூழலில்தான் அவரிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. " என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »