வினோத்
அமைச்சரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால், ஏன் ஜனாதிபதியாலும் பிரதமராலும் விடுவிக்க முடியவில்லை? என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அனந்தி சசிதரன் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
மேலும், நீண்ட காலமாக சிறைகளில் இருந்த அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுவொரு மகிழ்ச்சியான விடயமாகும்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வருடக்கணக்கில் போராட்டங்கள் நடைபெற்று நிலையிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டது உண்மையில் மகிழ்ச்சியான விடயமே.
இவை தவிர மிகுதியாக உள்ள அரசியல் கைதிகளும் எந்தவித பாரபட்சமும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
சிங்கள முஸ்லிம்கள் கூட ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் இன்றும் பலர் அரசியல் கைதிகளாக உள்ளனர்.