தற்போதைய நிலையில் சமையல் எரிவாயுகளின் விலைகளை (காஸ்) அதிகரிப்பதற்கு அரசாங்கம் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அதேபோல, அந்த நிறுவனங்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.