Our Feeds


Tuesday, June 29, 2021

www.shortnews.lk

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சீன காலனித்துவத்தின் கீழ் கொண்டுவர முயற்சியா? தேசிய பிக்கு முன்னணி கேள்வி

 



(இராஜதுரை ஹஷான்)


தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பேச்சளவில் மாத்திரம் செயற்படுத்தப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சீன காலனித்துவத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சி திஸ்ஸமஹரான வாவி புனரமைப்பு ஊடாக முன்னெடுக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என தேசிய பிக்கு முன்னணியின் பொதுச்செயலாள் வகமுல்லே உதித தேரர் தெரிவித்தார்.


தேசிய பிக்கு முன்னணியின் காரியாலயத்தில் இன்று (29) இடம் பெற்ற ஊடகவியலாளர்ச சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் ஒற்றையாட்சி முறைமையை உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ ஆட்சியமைத்தார். ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கை வெறும் பேச்சளவில் மாத்திரம் பின்பற்றப்படுகிறது. சீன நாட்டவர்கள் நாட்டின் பொது சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக செயற்படுவதை காண முடிகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க திஸ்ஸமஹராம வாவியை புனரமைக்கும் பணிகளை சீன நாட்டவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். இந்த வாவியை புனரமைக்கும் திறமை தேசிய மட்டத்தில் உள்ள பொறியியலாளர்களுக்கு கிடையாதா? நாட்டின் மரபுரிமைகளை பிற நாட்டவர்கள் வசம்ஒ ப்படைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

திஸ்ஸமஹராக வாவி புனரமைப்பில் ஈடுப்பட்ட சீன நாட்டவர்கள் அணிந்திருந்த ஆடை சீன நாட்டு இராணுச சீருடையை ஒத்தது என குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் குறித்த அரசாங்கமும். சீன தூதரகமும் குறிப்பிடும் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணானதாக காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீன நாட்டவர்கள் அபிவிருத்தி பணிகளிலும் பாரம்பரிய கைத்தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். இதனை சாதாரணமாக கருத முடியாது. வரலாற்றில் இடம் பெற்ற சம்பவங்களை மீட்டிப்பார்த்துக் கொள்வது அவசிமாகும். ஹம்பாந்தோட்தோட்டை மாவட்டத்தை சீன காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரும் முயற்சியா திஸ்ஸமஹராக வாவி புனரமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »