கடந்த சில வாரங்களாக எரிபொருள் விலையை அதிகரித்ததையிட்டு இலங்கையில் ஆளும்தரப்பிலும் எதிர்தரப்பு மற்றுமின்றி பொது மக்கள் மத்தியிலும் மிகவும் சர்ச்சையாக அமைந்த அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலையை தீர்மானிப்பது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசின் பொதுதீர்மானத்திற்கு அமைய அவர் விலையை அதிகரித்தபோதிலும், பல்வேறுதரப்பினரால் அவர் விமர்சிக்கப்பட்டிருந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான அமைச்சர் இம்முக்கிய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இன்னும் சில நாட்களில் ராஜபக்க்ஷவின் சகோதரரான பசில் ராஜபக்க்ஷ பாராளுமன்ற பதவி கொடுக்கப்பட்டு முக்கிய அமைச்சு பொறுப்புகளும் கிடைக்கப்பெறவிருக்கும் நிலையில், அமைச்சர் உதய கம்மன்பில இம்முக்கிய பதவியில் இருந்து ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. (TC)