Our Feeds


Wednesday, June 23, 2021

www.shortnews.lk

இன்றிரவு மீண்டும் அமுலாகும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

 


 

(செ.தேன்மொழி)


போக்குவரத்துக் கட்டுப்பாடு  அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்போது வழமைக்கு மாறாக அதிகளவான சோதனைச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடுதழுவிய ரீதியில் இன்று (23) புதன்கிழமை இரவு 10 மணிமுதல் வெள்ளிக்கிழமை (25) அதிகாலை 4 மணிவரையில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடு கடந்த 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டிருந்த நிலையில், இரு தினங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல் படுத்தப்பட்டுள்ளது. இதன்போது கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 20,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை மாகாண எல்லை பகுதிகளை இலக்கு வைத்தே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை மாத்திரமே இயங்கும்.

இதன்போது, அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஏனையவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.

மேலும் பொதுப்போக்குவரத்து சேவைகள் இயங்காது , வர்த்தக நிலையங்களும் திறக்கப்படமாட்டா. இந்நிலையில் மக்கள் தேவையின்றி வெளிப்பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதேவேளை, பொசன் போயா விடுமுறை தினமான நாளை மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் வீடுகளில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபட முடியும். மதஸ்தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »