Our Feeds


Thursday, June 24, 2021

www.shortnews.lk

உலகின் வேறு எந்த இனத்துக்கும் ‘அடிபணியாத இனமாக பௌத்தம் உருவெடுத்துள்ளது’ - பிரதமர் மஹிந்த

 



மஹிந்த தேரர் அறிமுகப்படுத்திய பௌத்தத்தின் உயிர்ச்சக்தி காரணமாக உலகின் வேறு எந்த இனத்துக்கும் அடிபணியாத உயரிய இனமாக பௌத்தம் உருவெடுத்துள்ளது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட  விரும்புகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பொசன் பூரணை தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தூய்மையான பௌத்த மதத்தை பின்பற்றி நல்லிணக்கத்துடன் வாழ எங்களுக்கு   வழிகாட்டிய மஹிந்த தேரரின்  இலங்கை வருகையை இந்த உன்னத பொசன் பூரணை தினத்தில் மிகுந்த கௌரவத்துடன் நினைவு கூர்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தர்மாசோக மன்னனுக்கும்  தேவனம்பியதீசனுக்கும் இடையிலான இராஜதந்திர நட்பின் சிறந்த விளைவாக இலங்கையில் பௌத்த சமயம் ஸ்ரீ புத்த ஆண்டு 236 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் எமது இனம் மதம் மற்றும் கலாசாரத்தின் புதிய யுகம் தோற்றம் பெற்றது. “பௌத்த கலாசாரத்தில் கலை கல்வி பகுத்தறிவு விவசாயம் ஆகிய அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைந்தன” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

“வேறு தினங்களில் பொசன் பூரணை தினத்தில் பக்தர்களால் நிறைந்து காணப்படும் மிஹிந்தலை புனித பூமி  இன்று அவ்வாறு இல்லாதிருப்பதற்கு காரணம்  மனித உயிர்களை காவுகொண்டு உலகெங்கும் பரவி வரும் கொவிட் -19 தொற்று நோயிலிருந்து நாம் அனைவரும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவாகும்” எனவும் அச் செய்தியில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »