Our Feeds


Saturday, June 26, 2021

www.shortnews.lk

மறு அறிவித்தல் வரை பள்ளிகளை மூடியே வைக்க வேண்டும். - முஸ்லிம் கலாசார திணைக்களம் அறிவிப்பு

 



(ஏ.ஆர்.ஏ.பரீல்)


நாட்டில் தற்­போது அமு­லி­லுள்ள மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான பய­ணத்­தடை மற்றும் மக்கள் ஒன்று கூடு­வ­தற்­கான தடை என்­பன உட்­பட பல்­வேறு கட்­டுப்­பா­டுகள் முற்­றாக நீக்­கப்­பட்டு மறு அறி­வித்தல் விடுக்­கப்­படும் வரை நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­களும் மூடப்­பட்­டி­ருக்க வேண்டும் என வக்பு சபையும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கங்­க­ளையும் கோரி­யுள்­ளது.


நாட்டில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மாத்­திரம் மூடி­வைக்­கப்­ப­ட­வில்லை. கொவிட் 19 தொற்­றி­லி­ருந்து நாட்­டையும், நாட்டு மக்­க­ளையும் காப்­பாற்­று­வ­தற்­காக கிறிஸ்­தவ ஆல­யங்கள், இந்து கோயில்கள், பௌத்த ஆல­யங்கள் என்­ப­னவும் மூடப்­பட்­டுள்­ளன என்­பதை முஸ்லிம் சமூகம் கவ­னத்தில் கொள்ள வேண்டும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார்.

சுகா­தார அமைச்சின் 20.06.2021 ஆம் திக­தி­யிட்ட சுற்­று­நி­ருபம் நாட்­டி­லுள்ள அனைத்து மதத்­த­லங்­களும் எதிர்­வரும் ஜூலை 5ஆம் திகதி வரை மூடப்­பட்­டி­ருக்க வேண்டும் எனத் தெரி­வித்­துள்­ளது. என்­றாலும் பள்­ளி­வா­சல்கள் உட்­பட மதத்­த­லங்­களை மீளத்­தி­றக்கும் தீர்மானத்தை சுகாதார அமைச்சும், கொவிட் செயலணியுமே தீர்மானிக்க வேண்டும் எனவும் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.- Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »