அரசாங்க, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றனவா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால், இம்மாதம் 20ஆம் திகதி அறிவுறுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டகல்களை அரசாங்க, தனியார் நிறுவனங்கள் எந்தவகையில் பின்பற்றுகின்றன என்பது தொடர்பில் பொலிஸார் ஆராய்வார்கள் எனவும் தெரிவித்தார்.
இதற்காக விசேட பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், அரசாங்க, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இதேவேளை, பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகிறதா? என்பது தொடர்பில் ஆராயாப் போக்குவரத்துப் பொலிஸாருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.