எரிபொருள்களின் விலை அதிகரிப்பால் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்துக்கும் இடையில் மோதல் நிலை ஒன்று உருவாகியுள்ள நிலையில், கடந்த வாரம் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தின்போதே சாகரவும், கம்மன்பிலவும் சந்தித்துக்கொண்டனர்.
ஆளுங்கட்சிக் கூட்டத்துக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் கம்மன்பிலவும் கலந்துகொண்டார். இதன்போது கூட்டம் நடைபெறும் அறையின் கதவருகில், நின்றுக்கொண்டிருந்த சாகர காரியவசத்தை பார்த்த கம்மன்பில, “சாகர எப்படி சுகம்” என்று வினவியுள்ளார்.
இதற்கு சாகரவிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும்,'சாகரவை நினைக்கும்போது உண்மையில் கவலையாக இருக்கிறது. ஏனென்றால், எரிபொருள்களின் விலை அதிகரிப்பைக் காரணங்காட்டி, நான் பதவி விலக வேண்டுமென எழுதிக் கொடுக்கப்பட்டக் கடிதத்தில் சாகர கையெழுத்திட்டுள்ளார்.'என இதன்போது கம்மன்பில வாசுவிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.