முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த 8 - 10 வாரங்களில் இலங்கையில் டெல்டா வைரஸ் பிரதான வைரஸாக மாறி நாடு முழுதும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கூறினார்.
மக்கள் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இந்த டெல்டா வைரஸ் மாறுபாடு குறித்து ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள்
இது குறித்து தமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், மக்கள் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றா விட்டால் அடுத்த 8 வாரங்கள் தீவிரமாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.