முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கராபிட்டி வைத்தியசாலையில் ரஞ்ஜன் ராமநாயக்க அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, நீதிமன்றம் 4 வருட சிறைத் தண்டனை விதித்திருந்தது.
இந்த நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்திருந்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், ரஞ்ஜன் ராமநாயக்கவின் பொதுமன்னிப்பு கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என அறிய முடிகின்றது.