தான் அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொள்ளப் போவதாக வெளியாகும் விடயமானது உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரைவில் அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கருத்துக்கள் வெளியாகிவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.