இன்று காலை 6.00 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கபுர கிராம சேவகர் பிரிவு (சன்ஹிந்தசெவன தொடர்மனை தவிர்ந்த பிரதேசம்) முடக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொளை 100 தோட்டம் கிராம சேவகர் பிரிவு போன்றன மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயலணி அறிவித்துள்ளது.
அத்துடன், ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நுவரெலியா மாவட்டத்தின் களுதமட பிரிவு, ஹப்புகஸ்தலாவ கிராமசேவகர் பிரிவு, வீரபுர கிராமசேவகர் பிரிவு, பஹால கொரகா ஓயா கிராமசேவகர் பிரிவு மற்றும் பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிஹேன கிராம சேவகர் பிரிவின் பொல்ஹேன வீதி, லேக் வியு வீதி மற்றும் முதலீட்டு சபை வீதி தவிர்ந்த சகல பகுதிகள் ஆகியன முடக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் மீகாவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாபேவத்த கிராம சேவகர் பிரிவின் உபுல் வசந்த வீதி, ஆரியதாச விதானகே வீதி, ஆரியதாச விதானகே வீதி முடிவு, தேவால வீதி, சியம்பலாபேவத்த கட்டுபெத்த வீதி தவிர்த்த பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.