Our Feeds


Tuesday, June 22, 2021

www.shortnews.lk

நாளை இரவு மீண்டும் முடங்கும் இலங்கை – இராணுவத்தளபதி அதிரடி அறிவிப்பு

 



நாளை (23) இரவு 10.00 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை 30 மணித்தியாலங்களுக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (22) கூறினார்.


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மே 21 அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் ஜூன் 21 அன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இந்த தளர்வு தொடர்ந்து மூன்று நாட்கள் நீடிக்கப்பட்டு, மீண்டும் 23ஆம் திகதி இரவு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த மூன்று நாட்கள் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை.

வருகின்ற பொசன் விழாவின் காரணமாக மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார். (TC)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »