கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஹதுடுவ ஜயலியகம பகுதியில் குறித்த நபர் இனங்காணப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தனுக்க பத்மராஜ, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பு பகுதியிலுள்ள பிரதான நிர்மாணத்துறை நிறுவனமொன்றில் பணியாற்றியுள்ள அவர் பொலன்னறுவை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அவரது குடும்பத்தின் மற்றும் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.