Our Feeds


Monday, June 21, 2021

www.shortnews.lk

ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கப் போவதில்லை: நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றுக் கொண்ட பாடங்கள் சிறந்த அனுபவம் என்கிறார் சம்பிக ரணவக்க

 



(எம்.மனோசித்ரா)


ஐக்கிய மக்கள் சக்திக்கும் எனக்குமிடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. எமக்குள் எவ்வித அதிகார போராட்டமும் கிடையாது. இங்கு யாரும் சார்ள்ஸ் இளவசர் அல்ல. எலிசபெத் மகாராணியாருக்கு பின்னர் நான்தான் அரச தலைவன் என்று சார்ள்ஸ் இளவரசருக்கு கூற முடியும். ஆனால் எம்மால் அவ்வாறு கூற முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஐக்கிய மக்கள் சக்திக்கும் எனக்குமிடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. சில ஊடகங்களே அவ்வாறான செய்திகளை பரப்பியுள்ளன. நாம் பதவிகளுக்காகவும் அதிகாரத்துக்காகவும் அரசியலில் ஈடுபடுபவர்கள் இல்லை. நான் அரசியல் பின்புலத்துடன் அரசியலுக்கு வரவில்லை.

ஆனால், எமது அரசியல் பிரவேசத்தின் பின்னர் பல மாற்றங்களையும் செய்துள்ளோம். இதற்கு சிறந்த உதாரணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தோல்வியடைச் செய்தமையாகும். எனவே எமக்குள் எவ்வித அதிகார போராட்டமும் கிடையாது. இங்கு யாரும் சார்ள்ஸ் இளவசர் அல்ல. எலிசபெத்  மகாராணியாருக்கு பின்னர் நான் தான் அரச தலைவன் என்று சார்ள்ஸ் இளவரசருக்கு கூற முடியும். ஆனால் எம்மால் அவ்வாறு கூற முடியாது.

இலங்கையில் அரசியல் என்பது மக்களின் விருப்பம் ஆகும். மக்களின் ஆணைக்கு ஏற்ப கிடைக்கப் பெறுவதாகும். எவ்வாறிருப்பினும் தற்போது நாம் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கப் போவதில்லை. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எனது தலையீடு காணப்படாது. தற்போது அரசாங்கத்தை பொறுப்பேற்று நிர்வகிப்பதற்கு முடியாத மிகவும் நெருக்கடியான நிலைமை உருவாக்கியுள்ளார்கள்.

எனவே தற்போது நாட்டை மாற்றியமைப்பதற்கு சிறந்தவொரு பலம் மிக்க குழுவே தேவைப்படுகிறது. திடீரென அரசாங்கத்தை கவிழ்ப்பதால் அதனைச் செய்ய முடியாது. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்து பெற்றுக் கொண்ட பாடங்களால் சிறந்த அனுபவம் இருக்கிறது. எனவே மீண்டும் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க மாட்டோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »