கொரோனா – டெல்டா வைரஸ் திரிபு குறித்து அவதானத்துடன் செயற்பட தவறும் பட்சத்தில், நாடு பூராகவும் இந்த வைரஸ் பரவும் அபாயம் ஏற்படும் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
இதனால், கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக மக்கள் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என அவர் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.
இந்தியாவில் பரவிவரும் அபாயகரமான கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான 5 பேர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு – தெமட்டகொட பகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
சமூகத்திற்குள் இருந்து, டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால், எதிர்வரும் வாரங்களில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் மேலும் அடையாளம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே,சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (TC)