Our Feeds


Friday, June 25, 2021

www.shortnews.lk

இணையவழிக் கல்வி - குரங்கினால் ஆசிரியைக்கு நடந்த பரிதாபம் - 50 ஆயிரம் பெருமதியான போன் தொலைந்தது.

 



கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பாடசாலைகள் யாவும் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததாகும்.


இந்நிலையில், பெரும்பாலான பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் இணைய வழியூடாகவே கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

இன்னும் சில பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள் இணையவழி பக்கமே செல்வதில்லை. இன்னும் சில பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், சமிக்ஞை கிடைக்காமையால், மரங்கள், மலைகள் மற்றும் உயரமான நீர்த்தாங்கிகளின் மீதேறி கல்விக்கற்று வருகின்றமை பலரும் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இணையவழியில் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்கும் ஆசிரியை ஒருவர், போதியளவான சமிக்ஞையை பெற்றுக்கொள்வதற்காக, தன்னுடைய ஸ்மாட் கையடக்க தொலைபேசியை, மரமொன்றி கிளைகளுக்கு இடையில் வைத்துள்ளார்.

அதன் பெறுமதி, 50 ஆயிரம் ரூபாயாகும். எனினும், அந்த கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்ட குரகொன்று மரத்துக்கு மரம் தாவி கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.

இந்த சம்பவம், ஹப்புத்தளை ஹல்துமுல்லை, கிரிமெட்​டிய எனுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அங்கு தரம்-4க்கு கற்பிக்கும் ஆசிரியை,   ஒவ்வொருநாளும் காலை 6 மணியிலிருந்து இணையவழி ஊடாக வகுப்புகளை எடுத்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »