கொரோனா வைரஸ் தொற்றை எதிர்நோக்கியுள்ள தருணத்தில், அரசாங்கத்திடம் உரிய வேலைத்திட்டம் இல்லாமையினால் 45 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை இருளடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவரும், முன்னாள் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார்.
அரச தொலைகாட்சி சேவைகயை பயன்படுத்தி, முழு நேர கல்வி நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுமார் ஒன்றரை வருடங்களாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க காலத்தில் மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை என்றால், இன்று இவ்வாறான பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.