Our Feeds


Sunday, June 27, 2021

www.shortnews.lk

பேஸ்புக்கில் கேவலப்படுத்தினார்கள் எனக்கூறி 2 பேரை பலகையில் வைத்து ஆணி அடித்த நபர்

 



கண்டி, பலகொல்ல பிரதேசத்தில் இருவரை கடத்திச் சென்று கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பேஸ்புக் ஊடாக நபரொருவரை அவதூறு செய்யப்பட்டதன் விளைவாக கடந்த 25 ஆம் திகதி இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அம்பிட்டிய பிரதேசத்தில் ஆலயமொன்றை நடத்திச் செல்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கடத்தலுக்காக பிரதான சந்தேகநபருக்கு ஆதரவளித்த மற்றைய சந்தேகநபர், தற்போது தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பிரதான சந்தேகநபரின் நண்பர்கள் இருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி நண்பர்கள் இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்த சந்தேகநபர், பின்னர் அவர்களை கடத்திச் சென்று, சிலுவைப்போன்ற பலகைகளில் அவர்கள் இருவரையும் வைத்து ஆணி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 44 மற்றும் 38 வயதான இருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை தேடி பலகொல்ல காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »