வாத்துவ, தெல்துவ கனேவத்த விகாரையில் 26 தேரர்கள் உட்பட 30 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விகாரையில் உள்ள தேரர்களுக்கு ஏற்பட்ட நோய் நிலமை காரணமான கடந்த 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 5 தேரர்கள் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த விகாரகையில் உள்ள 83 தேரர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 31 தேரர்கள் உட்பட 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் நேற்று (29) இரவு கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.