சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பலர், ஒவ்வாமை காரணமாக, மயக்கமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (26) வரை, இவ்வாறு 20 பேர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை விட, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலர், தர்மபுரம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியபோது சிலருக்கும் வீடுகளில் இருந்த சிலருக்கும், இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதை தொடர்ந்து, நிர்வாகம் ஆடைத்தொழில்சாலையின் நடவடிக்கைகளை நிறுத்தி, பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது.
ஆடைத்தொழிற்;சாலையில் பணியாற்றி வரும் 1,126 ஊழியர்களில் இதுவரை 900 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், சிலருக்கு விருப்பம் கொள்ளாத காரணத்தால் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.