Our Feeds


Monday, June 28, 2021

www.shortnews.lk

மேலும் 2 மாவட்டங்களின் 4 GS பிரிவுகள் லொக்டவுன் செய்யப்பட்டன.

 



இரத்தினபுரி மற்றும்  மொனராகலை ஆகிய மாவட்டங்களின்  4 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல காவல்துறை பிரிவுக்குட்பட்ட நொரகல்ல கிராம சேவகர் பிரிவில் நொரகல்ல மேல் பிரிவு, யக்தெஹிவத்த கிராம சேவகர் பிரிவில்  பீன்கந்த தோட்டம் 1 , பீன்கந்த தோட்டம் 2 மற்றும் பாதகட கிராம சேவகர் பிரிவில் பீன்கந்த தோட்டம் 3 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மொனராகலை மாவட்டம், மொனராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹிந்திகிவுல கிராம சேவகர் பிரிவில் நக்கலவத்த மற்றும் மில்லகெலேவத்த ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »