Our Feeds


Saturday, June 26, 2021

www.shortnews.lk

தனது அன்பு மகளை 15 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த தாய்!

 



சுதா சிவானந்தம் (வயது 36) – சிவானந்தன் சுகானந்தன் என்னும் தம்பதி கடந்த 2006ம் ஆண்டு பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் முடித்து லண்டனில் வசிக்க குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் எல்லோரையும் போல மகிழ்ச்சியான வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களின் மகிச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக சாயாகி என்ற மகளும் பிறந்துள்ளார். இவர்களின் மகிழ்ச்சியான கிட்டதட்ட 13 ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்திருக்கிறது.


இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதுவே சுதாவின் பிரச்சினைக்களுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது. விரைவில் ஊரடங்கு முடிவுக்கு வந்துவிடும், வாழ்க்கை முன்பு இருந்ததுபோல மாறிவிடும் என எதிர்பார்த்து காத்திருந்த சுதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதுமட்டுமல்லாமல் நாளுக்கு நாள் உலகளவில் குறிப்பாக லண்டனில் அதிகரித்து வந்த கொரோனா தொற்றும் அவரது மனநிலையை கடுமையாக பாதித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திடீரென அவருக்கு உடல் வலி, தலை வலி உள்ளிட்ட உடல் நலப்பிரச்சினைகள் இருப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். அவரும் மனைவி சுதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகவில்லை.


கிசிச்சைக்கு பின்னரும் தனக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி ஒருவிதமான மனநிலையிலேயே ஒரு வருடமாக வாழ்ந்துள்ளார். இந்நிலையில் தனக்கு குணப்படுத்த முடியாத ஏதே நோய் ஏற்பட்டுள்ளதாக சுதா நினைத்து பல முறை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் கொலை நடபெறுவதற்கு முந்தைய நாள் தனது கணவர் சிவானந்தத்திடம், “நான் இல்லை என்றால் குழந்தை பார்த்துக்கொள்வீர்களா என்று கேட்டுள்ளார், மேலும் அடுத்தநாள் காலையில் கணவரிடம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும்படி” கூறியுள்ளார். ஆனால் கணவரோ வேறு வழியின்றி தனது மனைவியின் பேச்சை மீறி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.


இந்நிலையில் கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனது மகளுடன் தனியாக இருந்த சுதா மன அழுத்ததினால், உடல்நலகுறைவினால் தான் இறந்துவிடுவேன் என நினைத்தும், தனது மரணத்திற்கு பிறகு குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள் என எண்ணியும், படுக்கை அறையில் குழந்தையின் கழுத்தில் 15 முறை கத்தியால் குத்தியுள்ளார். மேலும் குழந்தை இறந்த பின்னர் தன்னுடைய வயிற்றிலும் கத்தியால் குத்தி இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.


குழந்தையில் அலறல் சத்தம் கேட்டு வந்த பார்த்த பக்கத்து வீட்டு நபர், குழந்தையும் தாயும் இரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் காவல்துறைக்கும், சிவானந்திற்கும் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுதாவையும், குழந்தை சாயாகியையும் மீட்டு மருத்துவமனையில் அனுமத்துள்ளனர். சுதா குணமடைந்த பிறகு போலீசார் அவரை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சுதாவிற்கு மனநல ஆலோசகராக செயல்பட்ட மருத்துவர், சுதா கொரோனா வைரஸ் ஊரடங்கால் அதீத மன அழுத்தத்தில் இருந்ததாக குறிப்பிட்டார். கொரோனா ஏற்பட்டு தான் இறந்துவிடுவேன் என சுதா அடிக்கடி கூறியதாகவும் குறிப்பிட்டார். மன அழுத்தத்தினாலேயே குழந்தைய கொலை செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனநல சட்டத்தின் அடிப்படையில் சிகிச்சைக்காக சுதாவை அனுப்பி வைத்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »