வெளிநாடுகளில் பபணிபுரிந்த இலங்கையர்களுள் 142 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 16 நாடுகளில் பணிபுரிந்த 142 இலங்கையர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அந்த பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் வெளிநாடு சென்றவர்களுள் 4,800 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதுடன், அவர்களில் 4,600 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.