கொழும்பு - கொம்பனித்தெருவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் மத்தியில், டெல்டா திரிபு தொற்றுறுதியானோர் என்று சந்தேகிக்கப்படுகின்ற மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியுள்ளது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று, கொழும்பு மாநகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
அதன் பெறுபேறு கிடைக்கப்பெற்றதன் பின்னரே அவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியுள்ளதா? என்பது குறித்து உறுதியாக அறிவிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.