சரத் பொன்சேகாவுக்கும், சமல் ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று நாடாளுமன்றில் பெரும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து ஒன்றை முன்வைத்திருந்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை விவகாரத்தைப் போலவே அன்று தமக்கும் ஒரு நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்படுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்காக காத்திருக்கையில் தமக்கும் அத்தகைய அனுபவம் ஏற்பட்டது என்று பொன்சேகா கூறினார்.
“எனக்கு இராணுவ நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. நான் 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். அந்த தண்டனை வழங்கப்பட்டபோது மேல்முறையீடு செய்தோம். எனக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து அப்போது சபாநாயகராக இருந்தவர் என்னை நாடாளுமன்றத்திற்கு வர அனுமதிக்கவில்லை.” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த சமல் ராஜபக்ஷ – “நான் அப்போது சபாநாயகராக இருந்த போது உங்களை நாடாளுமன்றத்திற்கு வர அனுமதித்தேன்.
புத்தகங்களில் உள்ள முடிவைக் கருத்தில் கொண்ட பிறகு உங்கள் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு நீங்கள் வரவில்லையா? நாடாளுமன்றம் வர அனுமதிக்கப்படவில்லை? என ஆவேசமாக கேட்டார்.
வெளியே வா, வெளியே வா, வெளியில் வந்து காட்டு” என சமல் கூறினார்.
காரசாரமான பரிமாற்றத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் ஐந்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.