இலங்கையில் பீஸ் TV யை தடை செய்ய வேண்டும் என ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், குறித்த அறிக்கைகளின் பரிந்துரைகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவும் பீஸ் TV தடையை அமுல் படுத்த வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கையிலேயே இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ் TV என்பது பிரபல ஆங்கில மொழி இஸ்லாமிய பிரச்சாரகர் Dr ஸாக்கீர் நாயக்கின் தலைமையில் நடத்தப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.